விபச்சார பெண்களை அடையாளம் காண உடம்பில் பச்சை: அதிர்ச்சி தகவல்கள்

போலாந்து நாட்டில் விபச்சார தரகர்கள் தங்களது ஊழியர்கள் என அடையாளம் தெரிவதற்காக விபச்சார பெண்களின் உடம்பில் பச்சைக்குத்த வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போலாந்து நாட்டின் டேன்ஸ்க் பகுதியில் பொலிசார் விபச்சார விடுதியில் நடத்திய சோதனையில் பெண்கள் தங்களின் உடம்பில் தரகர்களின் பெயர்களை பச்சை குத்தியுள்ளனர்.
இதில் ஒரு பெண் தான் லெஸக் என்ற தரகரின் உரிமம் என பச்சை குத்தியுள்ளார். மேலும் விபச்சார விடுதியில் உள்ள 8 பெண்களும் பச்சை குத்தவில்லை.
ஆனால் தரகர்கள் தங்களது நம்பிக்கையான விபச்சார பெண்களுக்கு பரிசு அளிக்கும் வகையில் பச்சை குத்துவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பவல் (34), லெஸக் (26), மற்றும் ஒலக் (31) ஆகிய மூன்று சகோதரர்கள் உட்பட மொத்தம் 34 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் 70க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து கடந்த 4 வருடங்களில் 1மில்லியன் பவுண்ட்ஸ் சம்பாதித்ததாக தெரியவந்துள்ளது.
இதில் பச்சை குத்தி கொண்ட பெண்கள் அனைவரும் தங்களின் விருப்பத்துடன் தான் குத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment