அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கடன் அட்டையை அங்குள்ள உணவகம் ஒன்று நிராகரிதுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, நுகர்வோர் நிதி பாதுகாப்பு பணியகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடன் அட்டை மோசடியை தடுப்பது தொடர்பான புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார். பின்னர் ஒபாமா கூறுகையில்,”ஐநா சபையின் பொதுச்சபை கூட்டத்தின் போது நான் நியூயார்க் சென்ற போது அங்குள்ள ஒரு உணவகத்திற்கு சென்று இருந்தேன்.
அப்போது அந்த உணவகத்தில் எனது கடன் அட்டை நிராகரிக்கப்பட்டது. நான் போதுமான அளவு எனது அட்டையை பயன்படுத்தாத காரணத்தால் அதில் மோசடி நடந்திருக்கலாம் என்று அவர்கள் நினைத்து இருக்கலாம். இதன் காரணமாக கடன் அட்டை நிராகரிக்கப்பட்டு இருக்கலாம் என்று நான் நினைத்தேன் என்று சிரித்தாவறே கூறினார். அதிருஷ்டவசமாக மிட்ச்சல் அருகில் இருந்தார்” என்று தெரிவித்தார்.
- See more at: http://www.canadamirror.com/canada/32676.html#sthash.ba86Mhi3.dpuf

Blogger Comment
Facebook Comment