ஒரே நாளில் 20 கோடி – வசூல் சரித்திரம் படைத்த ‘கத்தி’!!




ஒரே நாளில் 20 கோடி – வசூல் சரித்திரம் படைத்த ‘கத்தி’!!
‘இளைய தளபதி’ விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கத்தி’ திரைப்படம் ஒரே நாளில் 20 கோடி வசூலை அள்ளி சரித்திரம் படைத்துள்ளது. இதில் முறையாக தமிழ்நாட்டில் ரூ.12.60 கோடி, கர்நாடகாவில் ரூ.2 கோடி, வெளிநாடுகளில் ரூ.5.50 கோடி என ‘கத்தி’ வசூலித்துள்ளது.
இது விஜய் – முருகதாஸ் கூட்டணியில் இதற்குமுன் வெளியான துப்பாக்கியை விட 30% சதவிகிதம் அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு தமிழ் படம் மிக அதிக அளவிலான ஓபனிங்கை பெற்றிருப்பதும் இதுவே முதல் முறை ஆகும். கூடிய விரைவில் தமிழ் சினிமாவின் அனைத்து வசூல் சாதனைகளையும் விஜய்யின் ‘கத்தி’ முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment